Map Graph

சிறீ இலால் பகதூர் சாசுதிரி தேசிய சமசுகிருத பல்கலைக்கழகம்

சிறீ இலால் பகதூர் சாசுதிரி தேசிய சமசுகிருத பல்கலைக்கழகம் என்பது முன்பு சிறீ இலால் பகதூர் சாசுதிரி ராஷ்ட்ரிய சமசுகிருத வித்யாபீடம் என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் அமைந்துள்ளது. இது ஓர் மத்திய பல்கலைக்கழகம் ஆகும். அது 1962ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாளன்று நிறுவப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு இப்பல்கலைக்கழகத்திற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதியினை 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கியது. பின்னர் மார்ச் 2020-ல், இந்திய நாடாளுமன்றம் மத்திய சமசுகிருத பல்கலைக்கழகங்கள் சட்டம், 2020ஐ நிறைவேற்றியது. இதனுடன் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் மத்திய சமசுகிருத பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சமசுகிருத பல்கலைக்கழகத்துடன் மத்திய பல்கலைக்கழக தகுதிக்கு மேம்படுத்தப்பட்டது.

Read article